இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது.
தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.
ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது.
இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும்.
IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன.
ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.
இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.
வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன.
வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.
அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.
விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.
Read more: http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_28.html#ixzz1HhN2IRaE
சனி, 26 மார்ச், 2011
பெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க
பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை.
அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம். அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.
இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும்.
இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள். இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும்.
அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து Start பட்டனை அழுத்தவும்.
உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும். நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம். இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.
பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும். File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும்.
டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும். அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும். அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும்.
இப்போது இணைக்கும் வேலை தொடங்கும். மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.
இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற http://www.hjsplit.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகம்
ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது.
முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை.
வை-பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.
1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இது இயக்க வேகத்தினை இரு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு மடங்கு பணிகளை மேற்கொள்ளலாம். இணையத்தில் உலா வரும் போதும்,
திரைப்படங்களைப் பார்க்கும் போதும், ஒரு அப்ளிகேஷ னிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போதும், இந்த வித்தியாசத்தினை உணரலாம். பல புரோகிராம்களின் இயக்கம் ஒரே நேரத்தில் மேற்கொள்கையில் இந்த வேகம் புலப்படுகிறது. கிராபிக்ஸ் ப்ராசசர் வேகம் ஒன்பது மடங்கு கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறது. கேம்ஸ் விளையாடுகையில் இதனை உணரலாம். அல்லது போட்டோ லைப்ரேரி மற்றும் வீடியோ எடிட்டிங் செயல்பாடுகளில் கிராபிக்ஸ் வேகத்தை அறியலாம்.
2. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் என இரண்டு கேமராக்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கலாம். வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை மிக எளிதாக இந்த கேமராக்களின் மூலம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பேஸ் டைம் (Face Time) வீடீயோ அழைப்பு மற்றும் அரட்டைக்கு இது உதவுகிறது.
3. முந்தைய ஐபேடைக் காட்டிலும் 33% ஸ்லிம்மாகவும் அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் 13.4 மிமீ தடிமன் கொண்டிருந்தது. இது 8.8. மிமீ கொண்டுள்ளது. ஐபோன்4 9.3 மிமீ அளவில் தடிமன் கொண்டது என்பது நினைவிற்குரியது. எடை 1.5 பவுண்டுக்குப் பதிலாக 1. 3 பவுண்டு உள்ளது. முதல் முறையாக கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் உயரம் 9.5 அங்குலம்; அகலம் 7.3; தடிமன் 0.34 அங்குலம்.
4. இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 4.3 பதிப்பிற்கு உயர்த்துகிறது. இது அனைத்து ஐபேட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் சில ஐபாட் சாதனங்களிலும், சில ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பில், மேம்படுத்தப்பட்ட சபாரி பிரவுசர் தரப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்க 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் உள்ளன.
5. ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம், எந்த வித வயர் இணைப்பு இல்லாமல் டாகுமெண்ட்களையும், போட்டோக்களையும், இணையப் பக்கங்களையும் அச்செடுக்கலாம். வை-பி இருந்தால் போதும். அதனையும் தானே உணர்ந்து அறிவிக்கிறது.
6.ஒரு தொழில் நுட்பம் எப்போது அதிகப் பயன் தருவதாக அமைகிறது என்றால், பயன்படுத்துகையில் அது ஒரு தொழில் நுட்பமாக அறியப்படக் கூடாது. ஐபேட் அந்த சிறப்பைப் பெற்றுள்ளது. விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்; இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப் பார்த்து எடிட் செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கலாம். நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக மாறுகையில் ஏதோ மந்திரக் கோல்களினால் செயல்கள் நடைபெறுவதைப் போல் உள்ளது.
7. இதன் பேக்லைட் எல்.இ.டி. டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன் கொண்ட போட்டோக்கள், திரைப்படங்கள், விளையாட்டுக்கள் உயிர்த்துடிப்புடன் நம் முன்னே உலா வருகின்றன. நாம் எப்படி இதனைப் பிடித்தாலும், அதற்கேற்ப டிஸ்பிளே மாறிக் கொள்கிறது. இந்த காட்சி 178 டிகிரி கோணத்தில் அகலமாக அழகாக காட்சி அளிக்கிறது.
8. பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. 10 மணி நேரம் கடல் தாண்டும் விமானப் பயணங்களில் இது கை கொடுக்கிறது.
9. இதன் மேல்கவர் புதுமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனத்துடன் இணைந்தே உள்ளது. ஸ்கிரீனை மட்டும் மூடுகிறது. சாதனத்தை மூடினால், இயக்கம் தானாக நின்றுவிடுகிறது. திறந்தால் உடனே இயங்கத் தொடங்கிவிடுகிறது. கவர் மைக்ரோ பைபர் துணியால் ஆனது. இதனைக் கொண்டு ஸ்கிரீனைச் சுத்தம் செய்திட முடியும். மேலாக உள்ள கவர் பாலியூரிதின் அல்லது லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுகையில், இந்த 2011 ஆம் ஆண்டு புதிய ஐபேட் 2 சாதனத்தின் ஆண்டாக இருக்கும். இது அடுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் என ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கருதுவதாகவும் அது தவறு எனவும் கூறினார். ஐபேட் சாதனம், கம்ப்யூட்டருக்கு அடுத்த நிலையில் மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனமாகும் என்று தெரிவித்தார்.
10. இதில் அதிகம் எதிர்பார்த்த யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்கிரீன் இல்லை. ராம் நினைவகத்தின் திறன் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஐபேடிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இது உள்ளது. புதிய, பெரிய மாற்றங்கள் எல்லாம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதனால், போட்டி நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களில் அதிக மாற்றங்களும் வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெள்ளி, 25 மார்ச், 2011
செவ்வாய், 22 மார்ச், 2011
ஆட்டோ கம்ப்ளீட் !
இன்டர்நெட் இணைப்பிற்கான பிரவுசரைத் திறந்து இயக்கி அதில் உள்ள முகவரி ஸ்லாட்டில் முகவரியை டைப் செய்திடுகையில் பிரவுசர் தானாகவே அதனை உணர்ந்து முகவரியை முழுதாகக் காட்டும். நாம் அமைக்கப் போகும் முகவரி அதுவாக இருந்தால் சரி. புதிய முகவரியாக இருந்தால் இச்செயல் நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா?
பதில் இதோ.
நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 5 அல்லது அதற்கும் பிற்பட்டதனைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் Internet Options செல்லவும். பின் Content என்ற பிரிவில் சென்று இணிணtஞுணt டேபைக் கிளிக் செய்திடவும். அதில் “AutoComplete” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு control panel கிடைக்கும். இங்கு AutoComplete வசதியை இயக்கவும் தடுக்கவும் உங்களுக்கு விருப்ப வசதி தரப்படும்.
இன்டர்நெட் முகவரி மட்டுமின்றி பார்ம்ஸ் மற்றும் பாஸ்வேர்டுகளுக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இதில் “Web addresses” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
நெட்ஸ்கேப் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Edit, Preferences, Navigator என்ற பிரிவுகளுக்கு வரிசையாகச் சென்று அதில் “Smart Browsing” என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இதில் “Location Bar Autocomplete” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Tools/Options சென்று “Privacy” பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் “Saved Information” என்பதின் கீழ் “Save information I enter in web page forms and the Search bar” என உள்ள பகுதியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து “History” என்ற பகுதியில் செட்டிங் என்ற பகுதியில் “History” என்பதன் முன் “0” என மாற்றிவிடவும்.
Read more...

Unmoveable Files என்றால் என்ன?
இயங்கு தளத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன் மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page File) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான Ram இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாதபோது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும். இதனையே பேஜ் பைல்/ ஸ்வொப் பைல் (Swap File) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது.
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணனியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம். அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter என்னும் யூட்டிலிட்டி விண்டோஸ¤டன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படு கிறது. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகு இந்த அன் மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாக இருக்கும்.
பேஜ் பைல் அல்லது ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்கு விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel/ Systerm/ Advanced tab/ Performance Setting/ Advanced tab/ Change தெரிவு செய்யுங்கள். அங்கு (Virtual Memory) என்பதன் கீழ் No paging file தெரிவுசெய்து ஷிலீt என்பதைக் கிளிக் செய்யுங்கள் பின்னர் கணனியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum Size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட்டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது கணனியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும். ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும் போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ணிபிஹி பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்டரியில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start - Run - Regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரை (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ Current Control Set/ Control/ File system வரை பயணித்து NtfsMft Zone Reservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலதுபுறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்Zடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்Zடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

வியாழன், 17 மார்ச், 2011
நேரம் பொன்னானது
சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.
இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.
நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.
`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)